
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைப்'. கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாகும். 1987-ல் வெளியான 'நாயகன்' படத்திற்குப் பிறகு மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அலி பசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் தக் லைப் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிடப்படும். அந்த வகையில், முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே தியேட்டர்களில் குவிந்த திரண்ட ரசிகர்கள், பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.