நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

2 hours ago 1

சென்னை: நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவிற்கு எதிராக நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்திற்கு நடிகர் தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நயன்தாராவிற்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸுக்கு பதிலளித்து நயன்தாரா வெளியீட்டு அறிக்கையில் 3 வினாடி விடியோவுக்கு ரூ.10 கோடி கேட்பது மிகவும் வினோதமாக இருக்கிறது என்றும் இது கீழ் தனமான செயல் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் நயன்தாராவிற்கு எதிராக தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் மும்பையை சேர்ந்த நெட்பிளீக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாக கூறி இந்த வழக்கை தாக்கல் செய்ய வண்டர்பார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article