நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

6 months ago 18

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய விமானப் படையில் பணியாற்றியவரும், நாடக நடிகராக கலைத் துறையில் அடியெடுத்து வைத்து, ஏராளமான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து மக்களின் அன்பைப் பெற்றவரும், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றவரும், 1994-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் "கலைமாமணி" விருது பெற்றவருமான டெல்லி கணேஷ் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் டெல்லி கணேஷ் அவர்கள். அவருடைய இழப்பு திரைப்படைத் துறைக்கு பேரிழப்பாகும்.

டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article