
சென்னை,
நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார்.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கங்குவா வெளியீட்டிற்குப் பின் துவங்கலாம் எனத் தெரிகிறது.
ஆர்.ஜே.பாலாஜி, நடிகை நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்கியுள்ளார்.