நடிகரின் டிரைவர் போதையில் கார் ஓட்டி விபத்து - 3 பேர் படுகாயம்

9 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன்2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவரிடம் டிரைவராக பணியாற்றி வந்தவர் புஷ்பராஜ். இவர் பாபி சிம்ஹாவின் தந்தையை வீட்டில் விட்டுவிட்டு கிண்டி கத்திபாரா அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென கார் விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, புஷ்பராஜிடன் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வாகனம் இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

Read Entire Article