நடப்பு சாம்பியன் மும்பை அதிர்ச்சி

3 months ago 16

வதோதரா: பரோடா அணியுடன் நடந்த ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை அணி 84 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. வதோதரா, கொடாம்பி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பரோடா 290 ரன், மும்பை 214 ரன் எடுத்தன. 76 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய பரோடா அணி, 185 ரன்னுக்கு சுருண்டதால் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது.

ஆனால், 262 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, பார்கவ் பட் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.2 ஓவரில் 177 ரன் மட்டுமே எடுத்து 84 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சித்தேஷ் லாட் அதிகபட்சமாக 59 ரன், ஷ்ரேயாஸ் 30, ஆயுஷ் 22 ரன் எடுக்க… கேப்டன் ரகானே உள்பட மற்ற வீரர்கள் கை கொடுக்கத் தவறினர். பார்கவ் 6 விக்கெட், பித்தியா 2, ஜோஸ்ட்னில் 1 விக்கெட் வீழ்த்தினர். பரோடாவுக்கு 6 புள்ளிகள் கிடைத்தது. ஆட்ட நாயகன்: பார்கவ்

The post நடப்பு சாம்பியன் மும்பை அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article