
மும்பை,
நடப்பாண்டில் (2025) இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வரும் அக்டோபர் மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
இதனையடுத்து நவம்பர் - டிசம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 14-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.