நசரத்பேட்டை-திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவண செய்யுமா?- அமைச்சர் எ.வ.வேலு பதில்

2 hours ago 1

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, நசரத்பேட்டை- திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பல் மேம்பாலம் கட்ட அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டை- திருமழிசை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறு ஆராய்ந்து அதற்கு டி.பி.ஆர் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக தண்டலம் பகுதியில் மேம்பாலம் மற்றும் நசரத் பேட்டையில் வாகன சுரங்கப்பாதை அமைக்க பணிகள் உள்ளடக்கியதாகத்தான் முதன் முதலாக திட்டம் தீட்டப்பட்டது.

இதற்கு பின்னால் மதுரவாயில் முதல் ஶ்ரீபெரும்புதூர் வரை சென்னை வெளிவட்ட சாலையில் 8 கி.மீ. நீளத்தில் உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்க 1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது" என்று தெரிவித்தார். 

Read Entire Article