ஆம்னி பஸ்சில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம்: போலீஸ் சோதனையில் சிக்கியது

3 hours ago 1

கடலூர்,

சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை அந்த பஸ், கடலூரை கடக்க முயன்றபோது, ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பஸ்சை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பேக்கில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதுகுறித்து, சென்னை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் நவீன் அன்வர் (வயது 25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்து வரும் விசாரணைக்கு பிறகே, யாருடைய பணம்?, எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரம் தெரியவரும். 

Read Entire Article