நக்சலிசத்தை ஒழிப்பதில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும்: அமித் ஷா பேச்சு

1 day ago 3

நீமுச்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) 86-வது தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நமது பிரதமர் மோடி கூறியது போல், 2026-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலிச அச்சுறுத்தல் முடிவுக்கு வரும். நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டு வருவதில், மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), குறிப்பாக அதன் கோப்ரா பிரிவு முக்கிய பங்கு வகிக்கும்,

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

முன்னதாக, சிஆர்பிஎப் நிறுவன தின அணிவகுப்பை அமித் ஷா பார்வையிட்டார். மேலும், பல்வேறு காலகட்டங்களில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

'1950-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அப்போதைய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல், சிஆர்பிஎப் கொடியை படைக்கு வழங்கியதால், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 அன்று சிஆர்பிஎப் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிஆர்பிஎப் கொண்டாட்டங்கள் நீட்டிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்ரல் 17) அணிவகுப்பு நடைபெற்றது' என அரசுத் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் இருந்து உள்நாட்டுப் பாதுகாப்பு, கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சர்வதேச அமைதிக்கான பணிகள், விஐபி பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை வரை பல்வேறு பணிகளில் சிஆர்பிஎப் முக்கிய பங்காற்றி உள்ளது. 

Read Entire Article