நகைக்கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையால் விழிபிதுங்கும் ஏழை, எளிய மக்கள்!!

4 hours ago 4

டெல்லி: அடகு வைத்த நகைகளை மீட்க செல்லும் மக்கள் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால் விழிபிதுங்கி நிற்கின்றனர். அசலுடன், வட்டியையும் சேர்த்து முழு தொகையை கட்டிய பிறகே மறு அடமானம் வைக்க முடியும் என்பதால் அதிக வட்டிக்கு மேலும் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை நகைக்கடன் வாங்கியவர்களுக்கு கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நகை கடன் வாங்கியவர்கள் அதற்கான அவகாசம் முடிந்ததும், வட்டி மட்டும் கட்டி மறு அடமானம் வைக்கும் முறையை ரிசர்வ் வங்கி தடை செய்து விட்டதே இதற்கு காரணம்.

நகை கடன் வாங்கியவர்கள் காலஅவகாசம் முடிந்ததும் மொத்த பணத்தையும் கொடுத்து நகையை மீட்டு, மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க முடியும். அதுவும் மறுநாள் தான் அவ்வாறு அடகு வைக்க முடியும் என்பதால் இது ஏழை, எளிய மக்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அசலுடன், வட்டியும் காட்டும் அளவுக்கு பணமும் இருந்தால் உடனடியாக வங்கியில் செலுத்திவிட்டு நகையை மீட்டு கொள்வார்கள். ஆனால் தற்போது புதிய நிபந்தனையால் வெளியில் வட்டிக்கு வாங்கியாவது நகையை மீட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதுவரை வட்டி மட்டும் கட்டி வந்து கால அவகாசம் ஒரு ஆண்டு அல்லது 6 மாதம் நிறைவு பெற்றதும் ஒரே நாளில் அதனை மறுஅடகு வைத்து விடலாம். ஆண்டு தோறும் வட்டி மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஏற்கனவே ஒரு சவரனுக்கு வங்கியில் கொடுக்கும் பணம் குறைவு. கடன் பெற அலைக்கழிக்கப்படுத்தல் ஆகிய காரணங்களால் ஏழை மக்கள் அடகு கடைகளை தேடி செல்லும் நிலையில் இது போன்ற விதிமுறைகளால் வங்கிகளில் நகை கடன் வைப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என்ற ஆதங்கம் எதிரொலிக்கிறது. ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மீண்டும் பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

The post நகைக்கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையால் விழிபிதுங்கும் ஏழை, எளிய மக்கள்!! appeared first on Dinakaran.

Read Entire Article