நகை திருட்டு குறித்து நிகிதா புகார்: வழக்குப்பதிவு விபரம் வெளியானது

4 hours ago 2

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் ேகாயில் காவலாளி அஜித்குமார், தனது காரில் இருந்த 9.5 பவுன் தங்கநகை மற்றும் ரூ.2,500 பணத்தை திருடியதாக மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா (42), திருப்புவனம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நகை திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் பதிவுசெய்துள்ள வழக்கின் விபரம் வெளியாகியுள்ளது. அதில், ‘நான் திண்டுக்கல் எம்விஎம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். இன்று (ஜூன்27) நானும், எனது அம்மா சிவகாமியும் மடப்புரம் காளிகோவிலுக்கு காரில் வந்தோம்.

அப்போது, அஜித்குமார் என்பவர் அறநிலையத்துறை சீருடை அணிந்து வந்து என்னிடம், உங்கள் காரை நான் நிறுத்தி வருகிறேன் என சொல்லி சாவி கேட்டார். இதையடுத்து, அவரிடம் எனது கார் சாவியை கொடுத்துவிட்டு சாமி தரிசனம் முடித்து வந்து எனது காரில் இருந்த பேக்கை பார்த்தபோது அதில் இருந்த கருமாரி கல் முகப்பு தாலிச்செயின் 6 பவுன், இரண்டு வளையல் 2.5 பவுன், இரண்டு கல் மோதிரம் ஒரு பவுன் என மொத்தம் 9.5 பவுன் நகையை காணவில்லை. எனவே, எனது புகார் மனுவினை ஏற்று எனது நகை 9.5 பவுனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

 

The post நகை திருட்டு குறித்து நிகிதா புகார்: வழக்குப்பதிவு விபரம் வெளியானது appeared first on Dinakaran.

Read Entire Article