ராஞ்சி,
பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் முன்னாள் தொழில்முறை கூட்டாளிகளான மிஹிர் திவாகர் மற்றும் சவுமியா தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திவாகர் மற்றும் தாஸ் ஆகியோர் ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆவர். அவர்கள் தோனியின் பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, இருவரின் மீதும் தோனி ஜனவரி 5ம் தேதி ராஞ்சியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான புகார் மனுவில், 2021ம் ஆண்டில் அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும், இருவரும் தனது பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளைத் தொடர்ந்து திறந்து, ரூ.15 கோடி மோசடி செய்ததாக தோனி அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் திவாகரும், தாசும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தோனி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று ஜார்கண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.