தோனி, சி.எஸ்.கே அல்ல... ஐ.பி.எல். தொடரின் சிறந்த கேப்டன், அணி இதுதான் - மனோஜ் திவாரி

3 hours ago 2

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 18 வருடங்களாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன.

அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதிலும் குறிப்பாக தோனி தலைமையிலான சென்னை அணி அதிக முறை ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரில் சிறந்த அணி சி.எஸ்.கே எனவும், சிறந்த கேப்டன் தோனி எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கே.கே.ஆர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி சிறந்த ஐ.பி.எல் கேப்டன் மற்றும் சிறந்த அணியை தேர்வு செய்து இருக்கிறார். இதுகுறித்து மனோஜ் திவாரி கூறும்போது, எனக்கு இதுவரை கிடைத்த சிறந்த ஐ.பி.எல் என்றால் 2012-ம் ஆண்டு கேகேஆர் அணிக்காக விளையாடியது தான். அந்த வருடம் தான் கொல்கத்தா அணி முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றது. அப்போது கொல்கத்தா அணி பட்டத்தை வெல்ல வேண்டும் என்கிற அழுத்தம் அதிகமாகவே இருந்தது.

ஆனாலும், இறுதிப்போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக பங்களிக்கும் அளவுக்கு நான் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருந்தேன். அந்த ஆண்டில் நாங்கள் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு சாம்பியனாக மீண்டு வந்த விதம் மறக்க முடியாது. என்னை பொருத்தவரை சிறந்த ஐ.பி.எல் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான். அதேபோல சிறந்த ஐ.பி.எல் கேப்டனாக ரோகித் சர்மாவை தேர்வு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article