தோகைமலை அருகே 6 கிலோ 600 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

3 weeks ago 4

கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம், கரூர் மாவட்டம் தோகைமலை கடைவீதி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து ஒருவர் விற்பனை செய்ய முயல்வதாக தோகைமலை போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த கடையில் வைத்து குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியை சேர்ந்த ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

The post தோகைமலை அருகே 6 கிலோ 600 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article