சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சி, வரும் ஜன.9ம் தேதி முதல் 11ம் தேதிவரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் , , விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தில் நடைபெற உள்ளது.
குறைந்தப்பட்ச கல்வித் தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி. மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். சென்னை கிண்டியில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையும் 90801 30299, 9080609808, 9841693060 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
The post தொழில்முனைவோருக்கு ஜன.9ம் தேதி முதல் 11ம் தேதி வரை பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி appeared first on Dinakaran.