தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க வணிக விதிகளில் திருத்தம்: தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

1 month ago 7

சென்னை: தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் வகையில், வணிக விதிகளில் திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதிக உயரம் இல்லாத கட்டிடங்களில் கட்டுமான திட்டத்தை மாற்றுதல், கூடுதலாக சேர்த்தல் ஆகியவற்றுக்கான அனுமதியை நகர ஊரமைப்பு துறை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அதிக உயரம் உள்ள கட்டிடத்திற்கு, அதன் தலைமை அலுவலக அளவில், 90 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 10,764 சதுர அடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு 45 நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும். அந்த அளவு அல்லது அதற்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 55 நாட்கள்,. சென்னை மாநகராட்சி 30 நாட்கள், நகராட்சி நிர்வாக ஆணையரகம் 45 நாட்கள், பேரூராட்சி இயக்குனரகம் 45 நாட்கள், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

கட்டிடத்தை இடித்து புனரமைப்பதற்கான அனுமதியை, சென்னை மாநகராட்சி 30 நாட்களுக்குள், நகராட்சி நிர்வாக ஆணையரகம் 45 நாட்களுக்குள், பேரூராட்சி இயக்குனரகம் 45 நாட்களுக்குள், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.  அரசு ஆதாரங்களில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதியை 75 நாட்களுக்குள் நீர்வளத் துறை வழங்க வேண்டும்.

The post தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க வணிக விதிகளில் திருத்தம்: தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article