அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக திமுகவினர் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

4 weeks ago 11

மேட்டூர்: எடப்பாடியில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், பாஜகவும், அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்த கூட்டணி குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி எதிராக, சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுகவினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக-வினர் பிரச்சாரத்தில் இன்று (ஏப்.19) ஈடுபட்டனர்.

Read Entire Article