நாமக்கல், மே 10: நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள், தங்களுடைய தொழிலாளர் பற்றிய விவரங்களை உடனடியாக காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டுமெ அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் குறித்த முழு விவரங்களை, அருகில் உள்ள காவல் நிலையங்கள் அல்லது தொழிலாளர் நலத்துறை அலுவலக்ததில், கோழிப் பண்ணையாளர்கள் உடனடியாக பதிவுசெய்ய வேண்டும். குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்களின், தங்களிடம் பணியாற்றினால், அவர்களது விவரங்களை கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
The post தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.