தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர் குழு நிகழ்ச்சி, சிறப்பு மலர் வெளியிடுதல்

5 hours ago 4

சென்னை: தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர் குழு நிகழ்ச்சி -சிறப்பு மலர் வெளியிடுதல் – குறும்பட போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குதல் மற்றும் சுருள்பட போட்டி பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக, தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் குழுவின் சார்பில் குறும்படபோட்டி (Short film Competition) மற்றும் சுருள்படபோட்டி (Reels Competition) நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் செய்தி வெளியீடுகள் வெளியிடப்பட்டு, குறும்படங்கள் மற்றும் சுருள் படங்கள் பெறப்பட்டன. அப்படங்களிலிருந்து சிறந்த மூன்று குறும்படங்களை வெற்றி படங்களாகவும் அப்படங்களுக்கு பரிசுடன் கூடிய சான்றிதழ் வழங்கலாம் எனவும், சுருள்பட போட்டியில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம் எனவும், தொலைநோக்குச் சிந்தனையார் கலைஞர் என்ற தலைப்பிலான சிறப்பு மலரை வெளியிடலாம் எனவும் குழுவால் முடிவு செய்யப்பட்டது.

குழுவின் தலைவர் / ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையிலும் மற்றும் இணைத் தலைவர்/ சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் முன்னிலையிலும் 24.04.2025 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர் என்ற தலைப்பிலான சிறப்பு மலர் குழுவின் தலைவரால் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, வெற்றி பெற்ற மூன்று குறும்பட போட்டியளர்களான (1) ரா.ரஞ்சித் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2,00,000/-ம், (2) இ.அயூப்கான் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1,50,000/-ம் மற்றும் (3) D.ஜெயகுமார் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.1,00,000/-ம் (காசோலையாக) வழங்கப்பட்டன. மேலும் சுருள்பட போட்டியில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் குழுவின் உறுப்பினர்களான நீதியரசர் அக்பர் அலி (ஓய்வு), கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் ரவி சுப்பிரமணியன் மற்றும் முனைவர் இன்னாசிமுத்து (காணொலி வாயிலாக) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர் குழு நிகழ்ச்சி, சிறப்பு மலர் வெளியிடுதல் appeared first on Dinakaran.

Read Entire Article