சென்னை,-
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் 2024-25-ம் கல்வியாண்டின், பிப்ரவரி பருவத்துக்கான திறந்தநிலை மற்றும் தொலைதூர படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் பெறவேண்டும். யு.ஜி.சி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லூரிகளில் தொலைதூர, ஆன்லைன் வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். https://deb.ugc.ac.in எனும், இணையதளம் வழியாக அக்டோபர் 31-ந் தேதிக்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை https://deb.ugc.ac.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.