
லக்னோ
உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று வாரணாசியில் இருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ் காலை 5.30 மணியளவில் ஆக்ரா- லக்னோ செல்லும் சாலையில் பதேஹாபாத் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த கோவிந்த் (68), ரமேஷ் (45) மற்றும் ஆக்ராவை சேர்ந்த தீபக் வர்மா (40) என அடையாளம் காணப்பட்டனர். மேலும் விபத்தில் பலியான 4வது நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்பட வில்லை.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பதேஹாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.