ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஏ பிரிவில் முதலிடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க வல்ல முக்கியத்துவம் வாய்ந்த போட்டியின் துவக்கத்தில் டாஸ் போடப்பட்டது. ஏற்கனவே 12 முறை டாஸில் தோற்ற இந்திய கேப்டன் இம்முறையும் டாஸை பறிகொடுத்தார். இதனால், தொடர்ந்து 13வது முறையாக டாஸ் பறிகொடுத்த அரிய சாதனையை அவர் அரங்கேற்றி உள்ளார். தொடர்ந்து 13 முறை டாஸ் தோற்ற நிகழ்வை நெட்டிசன்கள் நேற்று சமூக வலைதளங்களில் அங்கலாய்த்தும், கிண்டலாகவும் மீம்ஸ்களை உருவாக்கி பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து 13 முறை டாஸ் தோற்பதற்கான வாய்ப்பு, 0.0122 சதவீதம் மட்டுமே என ஒருவர் புள்ளி கணக்குடன் பதிவிட்டிருந்தார். இம்முறை டாஸ் தோற்ற பின், தன் துரதிர்ஷ்டத்தை எண்ணி ரோகித் சர்மா சிரித்தபடி நகர்ந்த வீடியோவை நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் அதிகமாக பகிர்ந்தனர். ரோகித், டாஸ் வெல்வதை காண காத்திருந்து தோல்வியடைவதை குறிக்கும் வகையில், கையில் மொபைலுடன் எலும்புக் கூடு படுத்திருக்கும் படத்தை பலர் பகிர்ந்தனர்.
The post தொடர்ந்து 13வது முறை டாஸ் இழந்த ரோகித்: வலைதளங்களில் கலாய்த்த நெட்டிசன்ஸ் appeared first on Dinakaran.