தொடர் விடுமுறை: திருச்செந்தூரில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

3 hours ago 2

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டுக்கு 2 நாட்கள் முன்பிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமிதரிசனம் செய்தனர். புத்தாண்டு தினத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை மார்க்கமாகவும், நெல்லை-திருச்செந்தூர் சாலை மார்க்கமாகவும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகன் உருவப்படத்துடன் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். பொங்கல் பண்டிகை நாளுடன் பாதயாத்திரை பக்தர்கள் வருகை குறைந்தது.

அதேசமயம், தொடர் விடுமுறையால் பல்வேறு ஊர்களில் இருந்து குடும்பம் குடும்பாக பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்று 3-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் பகுதியில் குவிந்தனர். தொடர்ந்து கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடினர். கோவிலில் அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து குவிந்ததால் திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும், ரெயில், பஸ்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

Read Entire Article