மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க பொதுமக்களுக்கு முதல்-மந்திரி அழைப்பு

8 hours ago 2

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் மாறிமாறி தாக்குதல் நடத்துகின்றனர். இதில் இருதரப்பிலும் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி அங்குள்ள காங்சுப் பாயெங் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தாக்குதல் குறித்து முதல்-மந்திரி பிரேன் சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மாநிலத்தில் இதுபோன்று நடப்பது நல்லதல்ல. எனவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அரசியல் மற்றும் தூதரக ரீதியாக விவாதிக்கலாம். இதனால் அமைதியை மீட்டெடுக்க உதவுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளது.

Read Entire Article