தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை

3 months ago 29

மும்பை,

உலக அளவில் கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இது இந்திய பங்குசந்தையிலும் எதிரொலித்து வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் வள நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாகவும் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் காணப்படுகிறது.

அந்த வகையில் இந்திய பங்குச்சந்தை இன்று 6வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. வர்த்தக இறுதியில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்தது.

அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 218 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 795 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், சுமார் 1000 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 478 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், 638 புள்ளிகள்வரை வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 50 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. 400 புள்ளிகள்வரை சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 221 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 158 புள்ளிகள்வரை வீழ்ச்சியடைந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 654 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

மேலும், 1,226 புள்ளிகள்வரை சரிவடைந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 168 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

அதானி துறைமுகம், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, டைட்டன் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

மஹிந்திரா , ஐடிசி, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், டாடா கன்சல்டன்சி மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவன பங்குகள் ஒரளவு விலை உயர்வுடன் கைமாறின. 

Read Entire Article