திருவாரூர், நவ. 22: திருத்துறைப்பூண்டி மீனாட்சிவாய்க்கால் பகுதியை சேர்ந்த முருகன் மகன்களான முரசொலிகுமரன் (25) என்பவருக்கும் அவரது தம்பி தீபன் (22) என்பவருக்குமிடையே கடந்த மாதம் 28ந் தேதி ஏற்பட்ட தகராறின்போது தலையில் காயமடைந்த தீபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து முரசொலிகுமரனை திருத்துறைப்பூண்டி போலீசார் கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து அடிதடி பிரச்சனையில் ஈடுப்பட்டு வந்த முரசொலிகுமரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கு எஸ்.பி.ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் இதற்கான உத்தரவினை கலெக்டர் சாரு நேற்று வழங்கினார். இதனையடுத்து முரசொலிகுமரன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.