மும்பை: தொடக்கத்தில் இருந்தே சரிவுடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.8% வரை சரிந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 690 புள்ளிகள் சரிந்து 82,500 புள்ளிகளானது. ஐ.டி. நிறுவனங்கள், வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிப் பங்குகள் விலை குறைந்ததால் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 22 நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 205 புள்ளிகள் சரிந்து 25,150 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
தேசியப் பங்குச் சந்தையில் 3,012 நிறுவன பங்குகளில் 1,033 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. 1,891 நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்து விற்பனை; 91 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன
The post தொடக்கத்தில் இருந்தே சரிவுடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.8% வரை சரிந்து முடிந்தன appeared first on Dinakaran.