‘‘பஸ் ஸ்டாண்டு பராமரிக்காத இலைபார்ட்டி ஒப்பந்தக்காரரு பத்தி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் சிட்டியில ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல இலை ஆட்சி காலத்துல புது பஸ் ஸ்டாண்ட் கட்டுனாங்க. பஸ் ஸ்டாண்டு கட்டுறதுக்கு ஒப்பந்தம் எடுத்தவரு, இப்ப குயின்பேட்டை இலை பார்ட்டி டிஸ்டிரிக் செக்ரட்ரியாக இருக்குறவருதான். அவர் தான் ஒப்பந்தம் எடுத்து கட்டி முடிச்சாரு. கட்டி முடிச்சி, முழுசா 4வருஷம் கூட ஆகல. ஆனா, இப்பவே பல இடங்கள்ல சுவர்ல மழைநீர் கொட்டுறதோட டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைமேடைகள் எல்லாம் டைல்ஸ் உடைஞ்சி குண்டும் குழியுமாக மாறிடுச்சு. பொருட்கள் எல்லாம் உடைஞ்ச நிலைக்கு மாறிவருது.
கட்டி முடிச்சா, கதை முடிஞ்சது என்பதை போல, அந்த இலை பார்ட்டி ஒப்பந்தக்காரரு இருக்குறாராம். எந்த பணியா இருந்தாலும் அதை குறிப்பிட்ட வருஷத்துக்கு எந்த பழுது ஏற்பட்டாலும் அதை ஒப்பந்தக்காரர் தான் சீரமைக்கணும். ஆனா, இவரோ, பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவே இல்லையாம். ஒப்பந்தம் எடுத்த பணிகள் கூட தரமில்லாம இருக்குதாம். கேட்டா? ஆட்சியில இருக்குறபோது எல்லாருக்கும் பங்கு கொடுத்துட்டேன். என்னால இவ்வளவுதான் செய்ய முடியும்னு சொல்லிட்டாராம். ஒதுக்கப்பட்ட நிதியை கூட முழுமையா செலவிடாம தரமின்றி கட்டிய பஸ்நிலையத்தை பராமரிக்காம இப்படியே விட்டா என்னாகும்னு பொதுஜனங்க கேள்வி எழுப்புறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கண்காணிப்பு வளையத்தில் சிக்கியிருக்காராமே சேலத்துக்காரரின் நண்பர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் சேலத்துக்காரரின் நண்பரின் கல்லூரிகளில் ஐடி சோதனை நடத்தினர். நீண்ட நாட்கள் சோதனை நடந்ததால் பரபரப்பு நிலவியது… சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாம். தொடர்ந்து, சேலத்துக்காரரின் நண்பரை முக்கிய நிர்வாகிகள் சிலர் சந்தித்து ரகசியமாக பேசியுள்ளார்களாம். இந்த தகவல், டெல்லி மேலிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம். தற்போது, சேலத்துக்காரரின் நண்பரை சந்தித்த நபர்கள் ‘கிலி’யில் உள்ளார்களாம். சேலத்துக்காரரின் நண்பரை, இவர்கள் சந்திக்க என்ன காரணம்… வேறு ஏதாவது விஷயம் நடந்துள்ளதா என்பதை தேனிக்காரர் அணியினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி மாஜி அமைச்சர் தொகுதி மாறி தேர்தல் வேலையை தொடங்கி இருக்கிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் இலை கட்சியில் பவர்புல் மாஜி அமைச்சராக வலம் வந்தவர், புரம் என்ற தொகுதியில் தொடர் வெற்றிகளை பெற்றாராம். கடந்த முறை படுதோல்வி அடைந்ததால் தொகுதி மாற்ற முடிவு எடுத்து அதற்கான பணியை சகோதரர் மூலம் தொடங்கி இருக்கிறாராம். முருகன் குடியிருக்கும் தனது சொந்த ஊரை கொண்ட தொகுதியில் தேர்தலுக்கான வேலைகளை முடுக்கி விட்டு இருக்கிறாராம். இதற்காக இலை கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொண்டு தேர்தல் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம்.
மாஜி அமைச்சரின் தோல்வி பயத்தால் தொகுதியை மாற்றி போட்டியிட முடிவெடுத்துள்ளதால் அவர் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியை பிடிக்க கட்சியில் மற்ற நிர்வாகிகளும் தயாராகி வருகிறார்களாம். தற்போது மாஜி அமைச்சர் போட்டியிட நினைக்கும் தொகுதி பாமக வசம் இருப்பதால் அந்த தொகுதியும் சற்று சவாலாகத்தான் மாஜிக்கு இருக்கும் என்ற கருத்தும் அக்கட்சியில் நிலவி வருகிறதாம். எது எப்படியோ மாஜி தொகுதி மாறுவதால் 2 தொகுதியிலும் களம் சூடுபிடிக்கும் என்பதால் குஷியில் இருக்கிறார்களாம் இலைக்கட்சி தரப்பினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டாஸ்மாக் விவகாரம் என்னவாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் சேல்ஸ் உச்சத்தில் இருக்கிறதாம், மாநில அளவில் டாப் 3 அளவில் கோவை தொடர்கிறதாம். இந்த நிலையில சிலர் ‘எப்எல்2’ கடைகள் வைக்க முயற்சி பண்ணாங்களாம். கோவை ரயில்வே ஸ்டேஷன் வட்டாரத்தில் ஓட்டல் நடத்துற ஒருத்தரு தான் எப்எல்2 லைசென்ஸ் வாங்கி தர்றதா சொல்லி வசூல் நடத்தறதா பேசிக்கிறாங்க. இவரும் மேலும் சிலரும் கோவையில் எந்த ஏரியால எங்கே பார் வைக்கலாம்னு பிளான் போட்டு தர்றாங்களாம். சில லட்சம் ரூபாய்க்கு தர வேண்டிய அனுமதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் டீலிங் பேசி வாங்குறாங்களாம்.
டாஸ்மாக் கடைகள் இருக்கிற ஏரியாவுல எப்எல்2 பாருக்கு அனுமதி தர்றாங்க. இதனால் டாஸ்மாக் சேல்ஸ் டல்லாகுது. மனமகிழ்மன்றம் இருந்தா தான் அது ‘எப்எல்2 பார்’. ஆனா, அங்கே எந்த விளையாட்டும் நடக்கிறது இல்ல. அதுவும் டாஸ்மாக் கடை மாதிரி தான் இருக்குது. தோட்டத்தை வாங்கி அதுல தகர செட் போட்டு எப்எல் 2 பார் நடத்திட்டு வர்றாங்க. கோவையில் டாஸ்மாக் முதுநிலை மேலாளர் போஸ்டிங் 5 மாசத்திற்கு மேல காலியாக கிடக்குது. வெளி மாவட்டத்தை சேர்ந்தவரை இன்சார்ஜ்ச் ஆக போட்டிருக்காங்களாம். அவரும் ேகாவையை எட்டி பார்க்கிறது இல்லையாம். இந்த நிலைமையில, எப்எல்2 பார் அதிகமாகிட்டோ போகுதாம். 2 வருஷத்துல எப்எல்2 பார் எண்ணிக்கை 60க்கும் மேல அதிகமாகியிருச்சாம். 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புதுசா எப்எல்2 ஆரம்பிக்க போவதா வந்திருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post தொகுதி மாறி தேர்தல் வேலையை தொடங்கியிருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.