தைவான் பெண்ணுடன் கோவை வாலிபர் டும்…டும்…

2 months ago 12

பெ.நா.பாளையம்: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி சுப்பிரமணியம்-விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகன் வைஸ்னவ்ராஜ். இவர் சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தைவான் நாட்டில் எம்.எஸ். படித்து அங்கு வேலை பார்த்து வந்தார். அந்நாட்டை சேர்ந்த ஜிம்மி சாங்-மிக்கி வாங் தம்பதியின் மகள் கிளாடியா சாங். இவர் அங்கு ஆசிரியையாக பணிபுரிகிறார். வைஸ்னவ்ராஜ், கிளாடியா சாங் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் வைஸ்னவ்ராஜ் சொந்த ஊரான சாமிசெட்டிபாளையத்தில் உள்ள கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

The post தைவான் பெண்ணுடன் கோவை வாலிபர் டும்…டும்… appeared first on Dinakaran.

Read Entire Article