தைப்பூச திருவிழா: அறுபடை வீடுகளில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

4 hours ago 1

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கோவில்களுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, திருச்செந்தூர் மற்றும் பழமுதிர்சோலை ஆகிய கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு வருகை தந்து, நீண்ட வரிசைகளில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

Read Entire Article