சென்னை: தைப்பூசத் திருநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
* தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: தமிழர்களின் ஆன்மிகப்பணி தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பூசத் திருநாளில் இறைவனை வணங்கி எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்.
* பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா #தைப்பூசம் ஆகும். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது. இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
* அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அசுர குலத்தை அழித்து தேவர்களை பாதுகாத்த தமிழ்க் கடவுள் முருகனை போற்றிக் கொண்டாடும் இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, ஒளி மற்றும் செழிப்போடு ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இந்த புண்ணியத் திருநாளில் முருகப்பெருமானின் தெய்வீக அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.
The post தைப்பூச திருநாளையொட்டி கட்சித்தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.