தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயை போற்றிடுவோம்: ​​முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

4 hours ago 4

‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பொங்கலையொட்டி திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமத்துவமே தமிழரின் பண்பாடு என்பதை உரக்கச் சொல்கின்ற வகையில், சாதி, மத பேதமின்றி, இயற்கையைப் போற்றி, உழைப்புக்கு முதல் மரியாதை செலுத்தி, உழவுக்குத் துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மனிதநேயத் திருவிழாதான் பொங்கல். அது ஒன்றுதான் நம் பண்பாட்டுத் திருநாள் என்பதைத் திராவிட இயக்கம் நிலைநாட்டி, மக்களின் திருவிழாவாகக் கொண்டாடச் செய்து வருகிறது.

Read Entire Article