நெல்லை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு

5 hours ago 4

தியாகராஜாநகர், மே 20: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர்,கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளராக மதுரை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளராக (மெட்ரோ) பணிபுரிந்து வந்த சந்திரா பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பானு ஆகியோர் தலைமையில் பொறியாளர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post நெல்லை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article