தேவர் ஜெயந்தி விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார்

2 months ago 13

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் தெய்வீகத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்புகள் தலைவர்கள், பொதுமக்கள் நாளை பசும்பொன்னிற்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) பசும்பொன்னில் நடைபெற இருக்கும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி முதல்-அமைச்சர் விமானம் மூலம் இன்று இரவு 7 மணிக்கு மதுரைக்கு செல்கிறார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மாநகர், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

Read Entire Article