தேளியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

4 weeks ago 7

திருப்புவனம், டிச. 18: தமிழகம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியதால் ஏற்படும் பாதிப்பு உயிரிழப்பு வரை நேரிடுகிறது. கோமாரி நோய் தாக்கிய மாடுகள் உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் சிரமப்படுகின்றன. இதனை தவிர்க்க மாநிலம் முழுவதும் மழை காலம் என்பதால் முன் எச்சரிக்கையாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 550 மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. தினசரி 150 கால்நடைகள் வீதம் 4 மாத கன்றில் இருந்து தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. திருப்புவனம் அருகே தேளி கிராமத்தில் இம்முகாமை கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார். கால்நடை துறை மண்டல இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் முகமது கான், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post தேளியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article