டெல்லி: தேர்தல்களில் 17C படிவம் வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாக்கு சதவீதத்தை பதிவு செய்யும் படிவம் 17C-ஐ தேர்தல் ஆணையம் வழங்காததை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் திருத்தம் குறித்து ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை, சதவீதத்தைப் பதிவு செய்யும் 17C படிவத்தை வழங்காத விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், படிவம் 17C-ஐ வழங்குவது தொடர்பான மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் விதி திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குடன் சேர்த்து ஜெய்ராம் ரமேஷ் மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தேர்தல்களில் 17C படிவம் வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.