சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், வட்டார, நகர மற்றும் மாநகராட்சி தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார்.
இதில், துணை தலைவர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் இ.எஸ்.எஸ்.ராமன், விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், சக்தி வடிவேல், முனவர் பாஷா, திருவேங்கடம், ஜவஹர் பாபு, ராஜம் எம்.பி நாதன், மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, தி.நகர் கோதண்டன், வேளச்சேரி லூயிஸ், கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுைகயில், ‘‘. இந்த கூட்டத்துக்கும், தேர்தல் கால கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது’’ என்றார்.
The post தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.