தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் கூட பங்களிப்புதான்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

2 weeks ago 2


சென்னை: தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் கூட பங்களிப்புதான் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 15வது தேசிய வாக்காளர் தினமானது, ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அரசு தலைமை செயலாளர் முருகானந்தம், மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி, ஆகியோர் பேசினர். இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் தேசிய வாக்காளர் தினம் குறித்த உரை காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், தேர்தல் கல்வியறிவு குழு தொடர்பான புதுப்பிக்கப்பட்ட புத்தகப்பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டி வடிவமைப்பு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ”தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் கூட பங்களிப்புதான். பள்ளி மாணவர்கள் வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்துங்கள்.

The post தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் கூட பங்களிப்புதான்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article