
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் சைமன் பிஷெர் பெக்கர் காலமானார். அவருக்கு வயது 63. 'ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன்' மற்றும் 'டாக்டர் ஹூ' ஆகிய படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று தனக்கென தனி இடத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் நடிகர் சைமன் பிஷெர் பெக்கர். இவர் உடல்நலக்குறைவால் காலமான செய்தியை அவரது மேலாளர் உறுதிப்படுத்தினார்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி பார்க்கும் 'ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன்' படத்தில் ஹபிள்பப் வீட்டில் பேயான பேட் ப்ரியர் கதாபாத்திரத்தின் மூலம் இவர் இந்திய ரசிகர்கள் இடையே பிரபலமானார்.. 'டாக்டர் ஹூ' சீசன் 5 ல் டோரியம் மால்டோவராக அவரது குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவ்விரு படங்களைத் தவிர்த்து அவர் பிரபலமான பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் 2012ம் ஆண்டு வெளியான அவரது ஆஸ்கர் விருது பெற்ற லெஸ் 'மிசரபிள்ஸ்' திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.