தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

3 months ago 20

 

தேனி, அக். 15:தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டிஆர்ஓ ஜெயபாரதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, முதியேர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட 281 மனுக்களை அளித்தனர்.

இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article