வலங்கைமான்: நாமக்கல்லில் இருந்து ராட்சத இரும்பு குடிநீர் குழாய்கள் ஏற்றி கொண்டு திருவாரூர் மாவட்டம் நார்த்தாங்குடிக்கு ஒரு லாரி இன்று காலை சென்றது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த சஞ்சீவிகுமார் ஓட்டி வந்தார். இதன் பின்னால் கொரடாச்சேரி கொத்தங்குடியை சேர்ந்த சத்தியசீலன் காரில் வந்தார். நார்த்தாங்குடி அருகே லாரியில் இருந்த பைப்புகள் திடீரென சரிந்து பின்னால் வந்த கார் மீது விழுந்தது. இதில் காரின் முன்பகுதி நசுங்கி சத்தியசீலன் படுகாயமடைந்தார்.
குடிநீர் குழாய்கள் சரிந்து விழுந்ததை பார்த்து திடீரென பிரேக் போட்டதால் ஒரு குழாய், லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறியது. தகவலறிந்து வலங்கைமான் போலீசார் சென்று சத்தியசீலனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சத்தியசீலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post லாரியில் ஏற்றி சென்ற இரும்பு குடிநீர் குழாய் சரிந்து விழுந்து காரில் சென்றவர் படுகாயம்: திருவாரூர் அருகே சோகம் appeared first on Dinakaran.