தேனி – மதுரை சாலையில் மெத்தைக் கம்பெனியில் திடீர் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

3 hours ago 3

தேனி: தேனியில் மதுரை சாலையில் உள்ள தனியார் மெத்தைக் கம்பெனியில் தீடீரென பற்றிய தீயால் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்தன. தேனி நகர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் மதுரை செல்லும் சாலையில் தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு பின்புறம் நவீன்குமார் என்பவர் இலவம் பஞ்சு மூலம் மெத்தைகள் தயாரித்து மொத்தம் மற்றும் சில்லறையாக விற்பனை செய்து வருகிறார்.

இந்நிறுவனத்தில் நேற்று மதியம், சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, புதிய மெத்தைகள் வைக்கப்பட்ட அறையில் திடீரென தீப்பற்றியது. தீப்பற்றிய சிறிது நேரத்தில் கம்பெனி முழுவதும் தீப்பரவி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து தேனி, போடி, ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறை வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த தீயையை போராடி அணைத்தனர். இவ்விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான மெத்தைகள் மற்றும் தலையணைகள் எரிந்து சாம்பலானது. இவ்விபத்து எவ்வாறு ஏற்பட்டது.

தீவிபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்குமா என தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

The post தேனி – மதுரை சாலையில் மெத்தைக் கம்பெனியில் திடீர் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் appeared first on Dinakaran.

Read Entire Article