“தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டார்” - திருமாவளவன் விமர்சனம்

4 hours ago 1

தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் தகவல்களை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் மத்திய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. ஆய்வாளர் அமர்நாத் தயாரித்த அறிக்கையை வெளியிட காலதாமதம் செய்கின்றனர். அதில் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. வரலாற்று உண்மைகளை நெடுங்காலத்துக்கு மறைக்க முடியாது. திமுக கூட்டணி யில் இருந்து விசிக வெளியேற வேண்டும் என நையாண்டியாகவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Read Entire Article