''மாநில உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது'' - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

3 hours ago 1

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் மாநில நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த சூழலில் திமுக தொடர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளிகரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, வழக்கம்போல வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

Read Entire Article