மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விதித்த சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தனி நீதிபதி விதித்த 3 மாத சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இளநிலை உதவியாளர் பணியில் இருந்து ஆய்வக உதவியாளராக பணியிறக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சின்னமனூரைச் சேர்ந்த பாலகுமரன் தொடர்ந்த வழக்கில் கல்வி அலுவலருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மீண்டும் இளநிலை உதவியாளராக பணிநியமனம் செய்ய உத்தரவிட்டும் நிறைவேற்றவில்லை என அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
The post தேனி கல்வி அலுவலருக்கு விதித்த சிறை தண்டனைக்கு ஐகோர்ட் கிளை தடை..!! appeared first on Dinakaran.