தேனி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

4 months ago 31
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், 16வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு வாகன ஓட்டிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேனி பிரதான சாலையில் கடமலைக்குண்டு அருகே ஏற்பட்ட விபத்தில் பாலூத்து கிராமத்தை சேர்ந்த வேல்முருகனும், பிரதீப் என்ற சிறுவனும் உயிரிழந்த நிலையில், வேல்முருகனின் பைக்கில் அமர்ந்து வந்த மாலியன் என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். மூன்று பேருமே ஹெல்மெட் அணியாத நிலையில், அதிவேகத்தில் வந்த வேல்முருகன் மாலியனுடன் பேசிக் கொண்டே கவனக்குறைவாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article