* ஐபிஎல் தொடரில் இதுவரை 15 ஆட்டங்கள் சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டப்பட்டுள்ளன.
* சென்னையில் 2021ம் ஆண்டு டெல்லி-ஐதராபாத் ஆட்டம் சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டியது. அதன் பிறகு சரியாக 4 ஆண்டுகள் கழித்து நேற்று முன்தினம்தான் டெல்லி-ராஜஸ்தான் இடையே சூப்பர் ஓவர் ஆட்டம் நடந்தது.
* இந்த 2 அணிகளில் டெல்லி 5 முறை சூப்பர் ஓவரிலும், ராஜஸ்தான் 4 முறை சூப்பர் ஓவரிலும் விளையாடி இருக்கின்றன.
* அதில் டெல்லி 4 முறையும், ராஜஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
* ஐபிஎல் வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர் ஆட்டம் 2009ம் ஆண்டு ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடந்தது. அதில் ராஜஸ்தான் வெற்றிப் பெற்றது.
* இப்போது களத்தில் உள்ள புதிய அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தவிர மற்ற எல்லா அணிகளும் சூப்பர் ஓவரில் விளையாடி இருக்கின்றன.
* ஒரே ஆண்டில் அதிகபட்சமாக 4 சூப்பர் ஓவர் ஆட்டங்கள் 2020ம் ஆண்டு நடந்தன. அதற்கு அடுத்து 2013, 2019ம் ஆண்டில் தலா 2 சூப்பர் ஒவர் ஆட்டங்கள் நடந்தன.
* கொரோனா பரவல் காலமான 2020ல் நடந்த 4 சூப்பர் ஓவர் ஆட்டங்களில் ஒன்று இரட்டை சூப்பர் ஓவர் ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் மோதிய மும்பை, பஞ்சாப் அணிகளும் தலா 176 ரன் எடுத்தன. அதனால் நடந்த முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 5 ரன் மட்டுமே எடுத்தன. 2வது சூப்பர் ஓவரில் மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்தது. பஞ்சாப் 4 பந்துகளிலேயே விக்கெட் இழப்பின்றி 15ரன் விளாசி வெற்றிப் பெற்றது.
The post இதுவரை 15 சூப்பர் ஓவர் appeared first on Dinakaran.