ஓட்டப்பிடாரம், டிச. 18: தேசிய வில்வித்தை போட்டியில் சாதனை படைத்த புதியம்புத்தூர் பள்ளி மாணவர்களை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் பாராட்டி வெகுமதி வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் ஜூஞ்சுனு மாவட்டம் புஹானா என்ற இடத்தில் கடந்த 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் தேசிய அளவிலான பஞ்சாயத் யுவா கிரீடா கேல் அபியான் (பைகா) திட்டத்தின் கீழ் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. இதில் புதியம்புத்தூர் எடிசன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடி 5 தங்கம், 5 வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேசை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களது திறமைகளை பாராட்டிய யூனியன் சேர்மன், வெகுமதி வழங்கி வாழ்த்தினார். அப்போது பள்ளி தாளாளார் அன்பு எடிசன் உடனிருந்தார்.
The post தேசிய வில்வித்தை போட்டியில் புதியம்புத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.