அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாகஉள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்.
மொத்த காலியிடங்கள்: 36 (பொது-15, ஒபிசி-8, எஸ்சி-6, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-3)
சம்பளம்: ரூ.70,000. வயது: 28க்குள்.
தகுதி: மல்டி மீடியா மற்றும் அனிமேஷன்/இயற்பியல் பாடத்தில் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது சிவில் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/மெட்டலர்ஜி/மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர்/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ஒன்றிய அரசின் விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
https://www.nal.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2025.
The post தேசிய விண்வெளி ஆய்வகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் appeared first on Dinakaran.